ரீ ரிலீஸாகும் ரவி மோகனின் ‘தாம் தூம்’

நடிகர் ரவி மோகன் நடித்த “தாம் தூம்” திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் வெளியான காலத்தில், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் அழகிய காதல் காட்சிகள் ஆகியவற்றால் பெரிதும் பேசப்பட்டது. அந்த காலத்தில் இந்த படம் ரசிகர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் மூலம் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். அவருடன் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிப் கேட்கப்படுகின்றன. மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ தரத்துடன் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading