சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்பிஎம் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘எஸ்.கே.எஸ்’ திரைப்படத்தை அன்னா ஆஷா மற்றும் சாய் ஷரண் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக அறிமுகமாகி நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை பால்பாண்டி – ஜூஜூ மற்றும் முத்து இணைந்து மேற்கொண்டுள்ளனர். இசையமைப்பை அனீஷ் – அலெக்ஸ் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் சாய் பிரபா மீனா பேசும்போது, “இந்த படம் பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வரும் சூழலில், ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை மட்டுமே நம்பாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க வைக்கும் கருத்தை வலியுறுத்தும் படமாக இது உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
