இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரம், குற்றம் மற்றும் வன்முறை நிறைந்த அந்தச் சூழலில் ‘ரயா’ என்ற கதாபாத்திரமாக யாஷ் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்கிறது. இதில் யாஷ் ‘ரயா’ மற்றும் ‘டிக்கெட்’ என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளதுடன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் ‘டாக்சிக்’ பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கிடையே இன்று வெளியாகியுள்ள ஆங்கில டிரெய்லர், படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
