ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அதன் தலைப்பை அறிமுகப்படுத்தும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கேரள பாரம்பரிய இசையான செண்டை மேளத்தின் தாளத்துடன் தொடங்கும் இந்த ப்ரொமோவில், நடிகை பூர்ணா கேரள பாரம்பரிய சேலையில் நடனமாடுகிறார். பின்னர் ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலான நடையுடன் தோன்றுகிறார். இந்த ப்ரொமோ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
