ரசிகர்களின் அன்பே என் அழகிற்கான காரணம்… நடிகை அஞ்சு குரியன்!

‘நேரம்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஓஹோ எந்தன் பேபி’, ‘அதர்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

சமீபகாலமாக திரைப்பட விழாக்களில் வித்தியாசமான உடைகளில் தோன்றி கவனம் ஈர்த்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அழகை ரசிப்பதில் தவறு எதுவும் இல்லை. எல்லையை மீறாத வரை அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியது தான். எனக்காக ரசிகர்கள் வழங்கும் அன்பும் ஆதரவும் என்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ரசிகர்களின் அன்பே என் அழகிற்கான காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading