மம்முட்டி – மோகன்லால் ஆக்ஷன் கதைக்களத்தில் நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பேட்ரியாட்’. இந்த திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே திரையில் இணைந்திருப்பது இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading