ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘லால் சலாம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படம் வெளியானபோது இளம் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ‘வை ராஜா வை’ ‘லால் சலாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது புதிய திரைப்படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்த மற்ற அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading