‘அரசன்’ படத்தில் நான் நடிக்கிறேன்… அப்டேட் கொடுத்த நடிகர் சமுத்திரக்கனி! #ARASAN

‘அரசன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. அந்த கட்டத்தை நிறைவு செய்த பிறகு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தயாரிப்பாளர் தாணு தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் சிம்பு நாயகனாக நடித்துவருகிறார். இந்த திரைப்படம் ‘வடசென்னை’ திரைப்படம் நடைபெற்ற காலகட்டத்திலேயே, வேறு ஒரு இடத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதை என்று வெற்றிமாறன் முன்பே அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தியுள்ளார். ‘அரசன்’ திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், நானும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளேன். இதில் சிம்புவுடன் மோதல் காட்சிகள் இடம்பெறுமா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் இந்தப் படத்தில் இருப்பேன் என்று வெற்றிமாறன் தெரிவித்தார். ‘அரசன்’ கதையில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வெற்றிமாறன் ஒவ்வொரு முறையும் கதையை விவரிக்கும் போது, அது முந்தைய முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் புதிய கோணத்தில் இருப்பதாகவும் தோன்றுகிறது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய உழைப்பைத் தேவைப்படுத்துகிறது. அதற்கு அப்பால் இப்போது வேறு எந்த தகவலையும் பகிர முடியாது” என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ‘வடசென்னை’ திரைப்படத்தில் குணா கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனி, அதில் அமீர், கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது அவர்கள் அனைவரும் ‘அரசன்’ திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading