தெலுங்குத் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம்வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் உதய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.


இந்த திருமண விழாவிற்கு தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அழைக்கப்பட்டிருந்த அந்த பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள திருமண வரவேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அளவில் அரசியல் தலைவர்கள், இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
