நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் புரோமோவின் மேக்கிங் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையில் உருவான இந்த புரோமோ வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த புரோமோவில் தோன்றும் பெண்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என வதந்திகள் பரவின. சிலர் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்கூட செயற்கை நுண்ணறிவு வடிவில் தோன்றியவர்கள் என கூறி வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு மேக்கிங் காட்சியை வெளியிட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் இன்பன் உதயநிதி இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதற்கிடையில், ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய திரைப்படத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
