நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதில் ‘பவுன் தாய்’ எனும் வட்டிக்கு பணம் வழங்கும் பெண்ணாக ராதிகா நடித்துள்ளார். வெளியான டீசர் பலரிடமும் கவனம் பெற்றிருந்தது.
முதலில் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம், பின்னர் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 25ஆம் தேதி இரவு சிறப்புக் காட்சி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகைகள் ஷாலினி, ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டினர்.
