நடிகர் சதீஷ் நடிப்பில் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது நடிகர் சுரேஷ் ரவியுடன் இணைந்து ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார்.

பிரவீன் சரவணன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருண்ட நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

இந்நிலையில், ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், இந்த திரைப்படம் வருகிற 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading