இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ மார்ச் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் அசோகனும் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திரைப்படத்திற்கு அழகிய காட்சித்தன்மையை வழங்கியுள்ளார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா மேற்கொண்டுள்ள நிலையில், உடை வடிவமைப்பை ருச்சி முனோத் செய்துள்ளார். மார்ச் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரெயிலரும் தற்போது வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
