ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகர் ஜெய்-ன் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ‘அக்கடி கொழுத்து பக்கடி’ பாடல்!

நடிகர் ஜெய் நடித்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் புதிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ‘சர்கார்’ மற்றும் ‘தர்பார்’ திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், தற்போது நடிகர் ஜெய்யை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து இந்த புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

தற்போது, இந்த திரைப்படத்தின் ‘அக்கடி கொழுத்து பக்கடி’ என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியானதும் முதல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். பாடல் வரிகளை கிரிஷ் ஜி மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா எழுதியுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading