‘ஜமா’ இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

பாரி இளவழகன் நடித்து இயக்கிய ‘ஜமா’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை இயல்பாகவும் நுணுக்கமாகவும் சித்தரித்த இந்த திரைப்படம் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் பாரி இளவழகனுக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இவர் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும், நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் மீண்டும் திரை உலகிற்கு வருகை தந்துள்ளார். இவர்களுடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘அன்பே டயானா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது காதல் திருமணத்தை கதைக்களமாக கொண்ட ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading