கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணா நடித்த ‘கழுகு’ திரைப்படம் வெளியானது. சத்திய சிவா இயக்கிய அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு வெளியான ‘கழுகு 2’ திரைப்படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் பிந்து மாதவி நடித்திருந்தார்.
தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் அவரது 25வது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. பால கிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் பிந்து மாதவி இணைந்துள்ளார். இதன் மூலம் இந்த ஜோடி மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
