சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகும் ‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் சுந்தர் சி. அவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இசையில் விஷால் நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

அதேபோன்ற பாணியில் சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புருஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

டீசரில் மனைவிக்கு பயந்து நடக்கும் கணவனாக விஷால் நடித்திருப்பது சுவாரஸ்யமாக காட்டப்பட்டுள்ளது. கணவனை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தும் மனைவியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை கோபி அமர்நாத் மேற்கொள்கிறார். தற்போது ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading