தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிய நடிகை ரகுல் பிரீத் சிங். டெல்லியைச் சேர்ந்த அவர் கிளாமர் கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் வித்தியாசமான வேடங்களிலும் நடித்துக் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனது தொழில்முறை நெறிமுறைகள் குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுவாக பிறமொழி நடிகைகள் அந்த மொழி தெரியாவிட்டாலும் படப்பிடிப்பின் போது எண்கள் அல்லது எழுத்துக்களை கூறி லிப் சிங்க் செய்து காட்சிகளை முடிப்பார்கள். ஆனால் இந்த முறைக்கு ரகுல் பிரீத் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தாம் பணிபுரியும் திரையுலகிற்கும், தங்களை அன்புடன் வரவேற்கும் ரசிகர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தெரியாத மொழியில் நடித்தாலும் எண்கள் அல்லது எழுத்துக்களை மட்டும் சொல்லி லிப் சிங்க் செய்து காட்சிகளை முடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நமக்கு வாழ்க்கை அளிக்கும் இந்த திரையுலகிற்கும் அளவில்லா அன்பு வழங்கும் ரசிகர்களுக்கும் அது சரியான மரியாதை அல்ல அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வசனங்களை சரியாக பேச மொழி அறிவு மிகவும் அவசியம் என்றும், அதுவே கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை உண்மையாக வெளிப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
