‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ், தற்போது இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘யூத்’. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘யூத்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘முட்ட கலக்கி’ பாடலை கென் கருணாஸ் எழுதி தானே பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இந்த பாடலை பயன்படுத்தி அதிகமான ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ‘முட்ட கலக்கி’ பாடலின் Unplugged பதிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது வெளியிட்டுள்ளார். எதிர்பாராத வகையில் வெளியிடப்பட்ட இந்த Unplugged பதிப்பில் அந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் தானே பாடியுள்ளார். இதை தொடர்புடைய வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.‘யூத்’ திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இளம் தலைமுறையை மையமாகக் கொண்ட கதையை சொல்லும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
