பாலிவுட் பிரபலங்களின் பிரம்மாண்டமான ஆடம்பரமான இல்லங்கள்… வெளியான சுவாரஸ்யமான தகவல்!

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் வசித்து வருகின்றனர் என்பது பலரும் அறிந்ததே. பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கனவு இல்லங்கள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்களை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக கடற்கரை அருகே அமைந்துள்ள, இயற்கை சூழலுடன் இணைந்த அமைதியான பங்களாக்கள் இவர்களின் விருப்பப்பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் சில பிரபலங்களின் பிரம்மாண்ட வீடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சயீப் அலி கான் இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அரியானாவில் அமைந்துள்ள படோடி அரண்மனை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. 7 படுக்கையறைகள், பல டிரெஸ்சிங் அறைகள் மற்றும் மொத்தம் 150க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த அரண்மனை ராஜபாட்டை வசதிகளுடன் அமைந்துள்ளது. இந்த இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.800 கோடி என கூறப்படுகிறது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் மும்பையில் புதிய 8 மாடி அதிநவீன சொகுசு மாளிகையில் குடியேறியுள்ளனர். அனைத்து நவீன வசதிகளுடனும் அமைந்துள்ள இந்த இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.250 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் கடலை நோக்கி எழுந்திருக்கும் ‘மன்னட்’ என்ற புகழ்பெற்ற இல்லத்தில் வசித்து வருகிறார். 6 மாடிகள் கொண்ட இந்த கடல் பார்வை பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி. மும்பைக்கு செல்லும் ரசிகர்கள் முதலில் காண விரும்பும் இடமாக இந்த வீடு திகழ்கிறது.

அமிதாப்பச்சன் ஜூஹூவில் அமைந்துள்ள ‘ஜல்சா’ பங்களாவில் வசித்து வருகிறார். அவரது இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.120 கோடி என கூறப்படுகிறது. தினமும் அவரது வீட்டின் வெளியே ரசிகர்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே மும்பையில் கடற்கரை பார்வையுடன் கூடிய 11,256 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை வாங்கியுள்ளனர். இந்த இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.119 கோடி என கூறப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன் கடலை நோக்கி அமைந்துள்ள அழகிய டூப்ளக்ஸ் வீட்டில் வசித்து வருகிறார். அவரது இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் மும்பையில் அமைந்துள்ள சொகுசு இல்லத்தில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.60 கோடி என கூறப்படுகிறது.

இவ்வாறு பல பாலிவுட் பிரபலங்களின் ஆடம்பரமான பங்களாக்கள் குறித்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading