ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. இந்த படத்தை விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கணவன்-மனைவி உறவில் உருவாகும் காதல் உணர்வுகளுடன் திகில் அம்சங்களும் இணைந்த கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் வெளியானதன் பின்னர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. டீசர் வெளியாகி இருந்த நிலையில், திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஓ பட்டர்பிளை’ திரைப்படம் வருகிற 6ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
