நடிகர் சிம்பு தற்போது ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைவேளையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வகையில், சிம்பு சமீபத்தில் அதிக வரவேற்பைப் பெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அமெரிக்காவில் தங்கி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல் தொடர்பாக சிம்பு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைப் பற்றி அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு முன்பு நடிகர் கமலும் அமெரிக்காவில் சில காலம் தங்கி இருந்து இதே தொடர்பான தொழில்நுட்ப அறிவைப் பெற்றதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து பயணிக்கும் நடிகர்களின் முயற்சி குறித்து ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
