சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தாய் கிழவி’ ஆகும். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றியுள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகிலுள்ள காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டியையும், அவரது குடும்பத்தினரையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் 75 வயதான மூதாட்டி கதாபாத்திரத்தில் ராதிகா மிகவும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். ‘தாய் கிழவி’ திரைப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ‘Script to Screen’ காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த காணொளியில், திரைப்படம் உருவான தொடக்க கட்டத்திலிருந்து வெளியீடு வரையிலான பணிகள் மற்றும் பின்னணிக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
