‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்திய கமல்ஹாசன்!

பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். குறிப்பாக இந்த சந்திப்பில் நிவின் பாலி, மமிதா பைஜூ சில தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் பகத் பாசில் பங்கேற்றார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படத்தை நடிகர் பகத் பாசில் தயாரித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல் கமல்ஹாசனும் பகத் பாசிலும் ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading