துருவ் விக்ரம் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார்? உலாவும் புது தகவல்!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த கடைசியாக வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகளை கேட்டுப் பரிசீலித்து வருகிறார் துருவ். சமீபத்தில் வெளியாகிய தகவல்களின் படி, அவரது அடுத்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான தீபக் ரெட்டி இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவராக நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், இன்னொரு நாயகியாக நடிகை ஸ்ரீலீலாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய முயற்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading