‘ஐ அம் கேம்’ மற்றும் ‘இம்மார்டல்’ என கயாடு லோஹர் நடித்த இரண்டு படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன். வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடிகை கயாடு லோஹர் அளித்த பேட்டியில், , ‘ஐ அம் கேம்’ படத்தின் புரமோஷனுக்காக தன்னால் ஒரு நாள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார். அதனால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், ‘இம்மார்டல்’ படக்குழுவிடம் அந்த குறிப்பிட்ட தேதி இல்லாததால் அப்படத்தின் புரமோஷனில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பிலும் தான் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இரண்டு படங்களின் புரமோஷன் தொடர்பாக வெவ்வேறு சூழல் ஏற்பட்டதாக கயாடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கிளாமராக நடிப்பது குறித்த கேள்விக்கும் அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்துள்ளார். பெண்களை தேவையில்லாமல் கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ள அவர், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் அது உண்மையாகவே தேவைப்பட்டால், அந்த கதாபாத்திரம் நம்பகமானதாக இருக்கும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெறும் பரபரப்பை உருவாக்குவதற்காக இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் கயாடு குறிப்பிட்டுள்ளார். சில விஷயங்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகலாம்; ஆனால் அத்தகைய கவனத்தை பெறுவதில் தனக்கு ஆர்வம் கிடையாது என்றும், கதையின் தேவையில்லாமல் இதுபோன்ற படங்களுக்கு தான் சம்மதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
