நடிகர் வெற்றி நடித்துள்ள ‘பரீட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிகர் வெற்றி நடித்துள்ள திரைப்படம் ‘பரீட்’. இந்தப் படத்தில் நாயகிகளாக அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளனர். மேலும், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கே.வி. கிரண் மேற்கொண்டுள்ளார். ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் இப்படத்தை தயாரித்துள்ளனர். ‘வெப்’ திரைப்படத்தை இயக்கிய ஹாரூன், இந்தப் படத்திற்கும் கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக பணியாற்றும் ஒரு போலீஸ் அதிகாரி தனது கடமையில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அந்த சவால்கள் அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? அவற்றை அவர் எவ்வாறு சமாளிக்கிறார்?” என்பதையே மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading