‘மை லார்ட்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு வழிபாடு செய்த படக்குழு!

சசிகுமார் தமிழ் திரையுலகில் இயக்குநரும் நடிகருமான பன்முகத்தன்மை கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்த வரிசையில், மை லார்ட் திரைப்படம் இன்று (பிப். 13) வெளியாகியுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘மை லார்ட்’ வெளியீட்டை முன்னிட்டு சசிகுமார் மற்றும் சைத்ரா இருவரும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading