இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்த அதர்வா, அதனைத் தொடர்ந்து தற்போது ‘இதயம் முரளி’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கும் இந்த காதல் திரைப்படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ளனர். மேலும் நிஹாரிகா, நடராஜன் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என படக்குழு ஒரு வீடியோவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பஹத் பாசில் இந்தப் படத்தில் இணைந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. இதனால் ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
