பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் ‘நல்லா நாகப்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் பார்த்திபன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உஸ்தாத் பகத்சிங்’. இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் பார்த்திபன் ‘நல்லா நாகப்பா’ எனப்படும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக, அவரின் முதல் பார்வை போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கதாபாத்திரம் படத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்திபன் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading