நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘தசரா’ படத்தில் போலவே, இந்தப் படத்திலும் நானி வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 2026ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்பு அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்று கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading