இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் (BTS) காட்சிகளை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பது ‘பேட்ரியாட்’ படத்தின் மிகப்பெரிய சிறப்பாகக் கருதப்படுகிறது. இவர்களுடன் பகத் பாசில் மற்றும் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தனை முன்னணி நட்சத்திரங்கள் ஒரே திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘பேட்ரியாட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்கள் இணைந்துள்ள இந்த படம், வசூல் மற்றும் வரவேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகளை படைக்கும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவுகிறது.
