2026ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட உலகின் டாப் 10 கதாநாயகிகளின் சொத்து பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பட்டியல் அவர்கள் பெற்றிருக்கும் சொத்து மதிப்பு, சந்தை மதிப்பு மற்றும் தொழில்துறையில் கொண்டிருக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா: தென்னிந்திய திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா, நடிப்பைத் தாண்டி தயாரிப்பு துறை, விளம்பர உலகம் மற்றும் தனிப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம் போன்ற பல துறைகளிலும் செயல்பட்டு வருகிறார். தற்போது யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.200 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுஷ்கா: ‘பாகுபலி’, ‘அருந்ததி’ போன்ற படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக உருவெடுத்த அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ.135 கோடியைத் தாண்டியுள்ளது என கூறப்படுகிறது.
தமன்னா: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருவதுடன், தனிப்பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி வரை இருப்பதாகவும், திரிஷாவின் சொத்து மதிப்பு ரூ.85 முதல் ரூ.100 கோடி வரை என்றும், காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.85 கோடி என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.66 கோடி, பூஜா ஹெக்டேயின் ரூ.50 கோடி, சாய்பல்லவியின் ரூ.47 கோடி மற்றும் சுருதி ஹாசனின் ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன.
