இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி அம்சங்களுடன் உருவாகி வருகிறது. கதாபாத்திரத்திற்கான தயார் பணிகளின் ஒரு பகுதியாக, லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை கோடை வெளியீடாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
