நடிகர் தனுஷ் மற்றும் ஹிந்தி நடிகை மிருணாள் தாகூர் இருவரும் நட்பாக பழகி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகவும், பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.
இந்த வதந்திகள் அதிகரித்த நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, பிப்ரவரி 14ஆம் தேதி, ஏப்ரல் 1ஆம் தேதிக்கான முட்டாள்கள் தினமாக மாறப் போகிறது போலிருக்கிறது. இந்த செய்தியை முதலில் யார் பரப்பினார்கள் என எனக்குத் தெரியவில்லை.
நான் திருமணம் குறித்து உறுதி செய்ததாகவும் சிலர் செய்திகளை பரப்பியதை பார்த்தபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இப்படியான தகவல்கள் எப்படி உருவாகின்றன என்பது புரியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
