அமெரிக்காவில் சூர்யாவின் அதிக வசூல் படமாக மாறிய ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே திரைப்படம் வசூலில் வேகத்தை காட்டியுள்ளது.

வெளிநாட்டு சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்காவில் இப்படம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அங்கு மிகக் குறுகிய காலத்தில் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்த முதல் சூர்யா படமாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உருவெடுத்தது. தற்போது அமெரிக்காவில் மட்டும் 1.6 மில்லியன் டாலருக்கும் அதிகமாக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த சூர்யா படமாகவும் இது மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவிலும் படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் வார இறுதிக்குள் இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading