மீண்டும் இணைகிறதா ‘டியூட்’ பட ஜோடி? பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்து வெளியான புது அப்டேட்!

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கியும் நடித்தும் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றியின் பின்னர் அவர் நடித்த ‘டிராகன்’, ‘டியூட்’ போன்ற திரைப்படங்களும் வசூலில் சாதனை படைத்து கவனம் ஈர்த்தன. குறிப்பாக, இந்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதா. இயக்குநராகவும் நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது துணை இயக்குநர் இயக்க உள்ள புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த படத்தில் இளம் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகன் மற்றும் பிற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இதற்கு முன்பு ‘டியூட்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading