மருத்துவ படிப்பை நிறைவு செய்து டாக்டர் ஆன நடிகை ஸ்ரீலீலா!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ஸ்ரீலீலா. தமிழில் ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 55வது திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். மேலும் அஜித்தின் 64வது திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஸ்ரீலீலா திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தபோதும் எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து பயின்று வந்தார். அவரது குடும்பத்தில் பலர் உயர் துறைகளிலும் பதவிகளில் உள்ளனர், திரைப்படங்களில் நடித்தாலும் மருத்துவர் பட்டத்தை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்தனர். அதை ஒரு சவாலாக ஏற்று தனது மருத்துவ படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீலீலா அதிகாரப்பூர்வமாக டாக்டர் பட்டம் பெற்றார். இதனைச் சேர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இனி அவர் ஒரு நடிகை மட்டுமல்ல, ‘டாக்டர் ஸ்ரீலீலா’ என்றும் அழைக்கப்படுகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading