சிரஞ்சீவி நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘விஸ்வாம்பரா’. இதில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வசிஷ்டா இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் வசிஷ்டா, “விஸ்வாம்பரா திரைப்படத்தில் சிரஞ்சீவியை எட்டு விதமான கெட்டப்புகளில் பார்க்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
கடைசி 20 நிமிடங்கள் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் வகையில் அமையும். அதனால் அந்த கிளைமாக்ஸ் பகுதியை முழுமையான சஸ்பென்ஸாக வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
