என்னிடம் மூன்று கதைகள் தயாராக உள்ளன… ஆனால் அவற்றில் நான் நடிக்க மாட்டேன் – நடிகர் சசிகுமார்!

தமிழ் திரையுலகில் இயக்குநரும் நடிகருமான பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள “மை லார்ட்” திரைப்படம் பிப்.13 அன்று வெளியாக உள்ளது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“மை லார்ட்” வெளியீட்டை ஒட்டி அளித்த பேட்டியில், சசிகுமார் தனது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “என்னிடம் மூன்று கதைகள் தயார் நிலையில் உள்ளன. அந்தப் படங்களில் மற்ற நடிகர்கள் ஹீரோக்களாக நடிப்பார்கள். அந்த படங்களில் நான் நடிக்க திட்டமில்லை.

முதல் படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இப்போது நான் வைத்திருக்கும் விருப்பப்பட்டியலில் கவனம் செலுத்தத் தயாராக இருக்கிறேன். இனி படம் இயக்கவும் தயார். கவுதம் வாசுதேவ் மேனன் பலமுறை கேட்டதால்தான் ‘ENPT’ படத்தில் நடித்தேன். தலைவரை மிகவும் விரும்புவதால் ‘பேட்ட’ படத்தில் நடித்தேன். ‘கிடாரி 2’ படத்தின் அடிப்படை கதையை இயக்குநருடன் பகிர்ந்துள்ளேன். அவர் முழுமையான கதையுடன் வர காத்திருக்கிறேன்” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading