‘வித் லவ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன், இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் இணைந்து தயாரித்துள்ளனர். காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பள்ளிக் கால காதல் கதையை மையமாக வைத்து, நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘வித் லவ்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படக்குழுவுடன் ரஜினிகாந்த் உரையாடிய தருணங்கள், அவர்களை பாராட்டிய காட்சிகள் மற்றும் குழுவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading