இலங்கை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அந்தோனி’ திரைப்படம்!

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், வாழ்வியலோடு கலந்த அழகான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அந்தோனி’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் கதையாசிரியர் தமிழ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். ‘அந்தோனி’ படத்தின் முதல் பார்வை காட்சிகளும், சில டிரைலர் பகுதிகளும் நடிகர் துல்கர் சல்மானுக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

‘அந்தோனி’ திரைப்படத்தை ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகிய இரு அறிமுக இயக்குநர்கள் இணைந்து எழுதி இயக்கியுள்ளனர். இது இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் திரைப்படமாகும். இவ்விருவரும் தமிழகத்தில் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திலும், மேலும் சில திரைப்படங்களிலும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இலங்கை சென்று இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் காயல் வின்சென்ட் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் டி.ஜே. பானு, சுதர்ஷன், சவுமி, அருள்தாஸ், நிழல்கள் ரவி, ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெய்தல் நிலப் பின்னணியில் அமைந்த இந்த திரைப்படம், கடல் சார்ந்த வாழ்வியல், காதல், குடும்ப உறவுகள் மற்றும் ஆழமான மனித உணர்வுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, போருக்குப் பின்னரான இலங்கை மக்களின் வாழ்க்கைச் சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading