பிரித்விராஜ் நடிக்கும் ‘ஐ நோபடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் பிரித்விராஜ் சமீப காலமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலிருந்தும் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வருவதால், தற்போது திரைப்படம் இயக்குவதை தவிர்த்து முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார்.

இதனைத் தவிர, மலையாளத்தில் ‘ஐ நோபடி’ மற்றும் ‘கலிபா’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ‘ஐ நோபடி’ திரைப்படத்தை ‘ரோஷாக்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிசாம் பஷீர் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது ‘ஐ நோபடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை வரும் கோடை விடுமுறையை குறிவைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை, நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading