கவனத்தை ஈர்த்த ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ திரைப்பட டிரெய்லர்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ திரைப்படம், நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வருகிற 20-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி, இளங்கோ குமரவேல், உதய் மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டிரெய்லரில், மாயமான நாய் குட்டியான ‘லக்கி’ அரசியல்வாதிகளின் கையில் சிக்கிக்கொள்ள, அந்த நாயைக் கதாநாயகன் மீட்பதே கதைக்கருவாக அமைந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading