‘சீதா பயணம்’ என்ற புதிய திரைப்படத்தை நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா, ‘சீதா பயணம்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இயக்குநர் அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ‘சீதா பயணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். காதலர் தினமான வருகிற 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
