உடல்நிலை கருத்தில்கொண்டு மருத்துவர்கள் வலியுறுத்தியதால் சினிமாவை விட்டு விலகினேன் – நடிகை முமைத்கான்!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாகவும், சிறப்பு பாடல்களுக்கு நடனம் ஆடும் கலைஞராகவும் பாலிவுட் தொடங்கி தென்னிந்திய திரைப்பட உலகம் வரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை முமைத் கான். குறிப்பாக தமிழில் வெளியான ‘போக்கிரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’ பாடலும், ‘கந்தசாமி’ படத்தின் ‘என் பேரு மீனாகுமாரி’ பாடலும் அவரை தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கின.

இதற்கிடையில், 2016ஆம் ஆண்டு அவர் சந்தித்த ஒரு சிறிய விபத்து அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தின் காரணமாக அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். பின்னர் ஹைதராபாத்தில் மேக்கப் மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகளை வழங்கும் ஒரு பயிற்சி நிறுவனத்தை தொடங்கி, அதை தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவை விட்டு ஒதுங்கிய காரணம் குறித்து அவர் பேசுகையில், “2016ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் நான் சுமார் 15 நாட்கள் கோமா நிலையில் இருந்தேன். என் மூளையில் நரம்புகள் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் எந்தவிதமான கடினமான உடல் உழைப்பும் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருந்தேன். அந்த காலகட்டத்தில் மேக்கப் மற்றும் புதிய வகை சிகை அலங்காரங்கள் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு, ஹைதராபாத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு இன்ஸ்டிடியூட்டை தொடங்கி நடத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading