2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பலரிடமும் பாராட்டுகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கென் கருணாஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
‘யூத்’ திரைப்படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘யூத்’ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை கென் கருணாஸே எழுதி பாடியுள்ளார். இப்படம் இந்த மாதம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
