ராஜூ முருகன் சினிமாவை உண்மையாக நேசிப்பவர் – சசிகுமார் நெகிழ்ச்சி

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சைத்ரா நடித்த ‘மை லார்ட்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி, த.செ.ஞானவேல், மாரிசெல்வராஜ், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் உரையாற்றிய இயக்குநர் பாலா, சசிகுமாரின் நடனத் திறனையும், நடிகை சைத்ராவின் நடிப்பையும் மனதார பாராட்டினார். சசிகுமார் தனது சிஷ்யன் என்பதில் தனக்கு பெருமை இருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், தற்போது மாரிசெல்வராஜ் தான் தனக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், அவரது படைப்புகளை பாராட்டுவதாகவும் பாலா கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து பேசிய சசிகுமார், “இயக்குநர் ராஜூமுருகன் ஒரு சைக்கோ என்று பலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் அவருடன் பல நாட்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் சினிமாவை உண்மையாக நேசிப்பவர். அவரைப் பற்றி அப்படி கூறியவர்கள் தான் உண்மையில் சைக்கோ” என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading