கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் இன்னொரு திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்திற்கான புரொமோ வீடியோவின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளை, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜு மேனன் படமாக்கி வருகிறார். இந்த புரொமோ வீடியோவில் இயக்குநர் நெல்சனும், இசையமைப்பாளர் அனிருத்தும் தோன்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன், அதே நேரத்தில் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான முன்னேற்பாடுகளையும் இப்போதே தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கதாநாயகி யார், வில்லன் யார், மற்ற நடிகர்கள் யார் என்பதான முழு நடிகர் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
