‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘வித் லவ்’. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேண்டஸி கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
